கல்பனாவின் காதல்
கல்பனாவின் காதல் [1] கல்பனாவும் அவள் தோழி ராதாவும் நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒருநாள் சந்தித்து, ஒரு குளத்தருகே உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். அப்பொழுது, கல்பனா,” ராதா, அங்கே பார். அங்கே ரெண்டு பறவைகள் சேர்ந்து போயிட்டிருக்கும் வழியில ஒரு தாமரைப்பூ இருக்குதே, தெரியுதா?“ என்றாள். “பாத்தேன். அந்தப் பறவைகளின் பெயர் என்ன? அவை இரண்டும், ஒன்றை ஒன்று பிரியாமல் போவுதே!” என்று ஆச்சர்யப்பட்டாள் ராதா. ”அந்தப் பறவைகளுக்குப் பெயர் மகன்றில். அவற்றில் ஒன்று ஆண்; மற்றொன்று பெண். அவை ரெண்டும் மனமொத்த கணவன் மனைவி போல், ஒன்றைவிட்டு ஒன்று பிரியாமல் எப்பொழுதும் ஜோடியாகத்தான் போகும். அவை போகும் வழியில் ஒரு பூ இருந்தால், அந்தப் பூவைத் தாண்டிப் போவதற்காக அந்தப் பறவைகள் சில விநாடிகள் பிரிந்து சென்று மீண்டும் சேர்ந்தே செல்லும். பூவைக் கடப்பதற்காகப் பிரிந்திருக்கும் அந்த ஒவ்வொரு விந...