Posts

Showing posts with the label சுமதிக்கு மட்டும் ஏகாதசி

சுமதிக்கு மட்டும் ஏகாதசி

  சுமதிக்கு மட்டும் ஏகாதசி [1] சுமதியைப் பார்த்துப் பல நாட்களாகிவிட்டன என்று நினைத்த தேவிகா அவளைப் பார்ப்பதற்காக அவள் வீட்டுக்குப் போனாள். சுமதியைப் பார்த்த தேவிகா பெரும் அதிர்ச்சி அடைந்தாள். சுமதி எப்பொழுதும் நன்றாக உடையுடுத்திக்கொண்டு, தன்னைச் சிறப்பாக அலங்கரித்துக்கொள்வதில் மிகுந்த ஆர்வம் உடையவள். அத்தகையவள், அன்று, அழுக்குப் படிந்த புடவையை அலங்கோலமாகக் கட்டிக்கொண்டு, தலை வாராமல், முகம் கழுவாமல், தூக்கத்திலிருந்து அப்பொழுதுதான் கண் விழித்ததுபோல் படுக்கையில் படுத்திருந்தாள்.  சுமதியைப் பார்த்த தேவிகா அதிர்ச்சியோடு. “ஏ, சுமதி உனக்கு என்னடி ஆச்சு உனக்கு? ஏன் இப்படி இருக்கே? உடம்பு சரியில்லையா?” என்று கவலையோடு கேட்டாள். “உடம்பெல்லாம் நல்லாதான் இருக்கு. நேத்திக்கி ராத்திரி தூக்கமே வரல்லை. இந்த ஊர்லே இருக்கிற எல்லாரும் ராத்திரி பூரா தூங்குறாங்க. மனுஷங்க மட்டுமில்ல. ஆடு, மாடு, நாய், நரி எல்லாம்கூடத் தூங்குது. நான் ஒருத்தி மட்டும் ராத்திரி பூராவும் முழிச்சுக்கிட்டு இருந்தேன்.  எல்லாரும் தூங்குறாங்க. எனக்கு மட்டும் ஏகாதசி. நேத்திக்கு மட்டுமில்ல. கொஞ்ச நாளாவே  இப்படித்...