Posts

Showing posts with the label காணமற்போன காஞ்சனா

காணமற்போன காஞ்சனா

  ”ஏ, ராமானுஜம், நீ இன்னிக்கி விக்ரமைப் பாத்தியா?” என்று கேட்டான் அவன் நண்பன் செந்தில். “நீயும் அவனும் ஒரே பில்டிங்லேதானே இருக்கீங்க. அவனைக் காணும்னு என்னைக் கேக்கிறியே! இன்னிக்கு அவன் வேலைக்கு வர்ரலை. அதான் எனக்குத் தெரியும்.” என்றான் ராமானுஜம். ”நானும் அவனும் எப்பொழுதும் ஒண்ணாதான் வேலைக்கு வர்ரது வழக்கம். இன்னிக்கு, நான் வேலைக்குக் கிளம்புறப்ப  அவனுக்கு ஃபோன் பண்ணினேன்; அவன் எடுக்கலை. நீயும் அவனும் பக்கத்துப் பக்கத்து டெஸ்க்குங்றதுனாலே உன்னைக் கேட்டேன். சாயங்காலம் போய் அவனைப் பாக்கிறேன்.” என்றான் செந்தில். ராமானுஜம், செந்தில், விக்ரம் ஆகிய மூன்று பேரும் ஒரே கல்லுரியில் படிப்பை முடித்துவிட்டு இப்பொழுது பெங்களூரில் ஒரு கணினி நிறுவனத்தில் வேலை பார்க்கிறார்கள். செந்திலும் விக்ரமும் நெருங்கிய நண்பர்கள். அவர்கள் இருவரும் ஒரே கட்டிடத்தில் தனித்தனி அப்பார்ட்மெண்ட்டில் இருக்கிறார்கள். சென்ற வருடம் கல்லூரியில் படிக்கும்பொழுது, செந்தில் வீட்டுக்கு அருகே இருந்த காஞ்சனா என்ற ஒரு பெண்ணை விக்ரம் காதலித்தான். விக்ரம் காஞ்சனா காதலைப் பற்றி, செந்திலுக்கும் அவன் தங்கை மீனாவுக்கும் தெரியு...