பலாப்பழத்தைப் பக்குவமாகப் பறித்த பலராமன்
பலாப்பழத்தைப் பக்குவமாகப் பறித்த பலராமன் வழக்கமாகச் சந்திக்கும் இடத்தில் நந்தினியின் வருகைக்காகக் காத்திருந்தான் பலராமன். எப்பொழுதும் நந்தினியும் அவள் தோழி கமலாவும் சேர்ந்தே வருவார்கள். அன்று, வெகுநேரம் கழித்து, கமலா மட்டும் வந்தாள். ”நந்தினி வரவில்லையா?” என்று கமலாவைக் கேட்டான் பலராமன். ”நந்தினி இனிமேல் வரமாட்டாள்.” என்று சொல்லிப் பலராமனை அதிர்ச்சிக்கு உள்ளாக்கினாள் கமலா. “ஏன்? அவளுக்கு என்னாச்சு?” என்று ஆச்சர்யத்தோடும் சற்று பயத்தோடும் பலராமன் கேட்டான். “இப்ப காலேஜ் எல்லாம் முடிஞ்சு போச்சு. அதனாலே அவ இப்ப எங்கேயாவது வெளியில போகணுமுன்னா, அவ அம்மா லீலாவின் ஆயிரம் கேள்விகளுக்குப் பதில் சொல்லணும். அதுக்குப் பயந்துதான் அவ வரல்லை. நீ காத்திருப்பியே என்று உன்னிடம் தன் சூழ்நிலையைப் பற்றிச் சொல்லச் சொல்லி என்னை அனுப்பினாள்.” என்று விளக்கம் அளித்தாள் கமலா. ”சொல்ல வேண்டியதை நந்தினி ஃபோன்ல சொல்லியிருக்கலாமே?” என்று கேட்டான் பலராமன். ”சொல்ல வேண்டிய செய்தி நிறைய இருக்கு, அதனாலேதான் என்னை அனுப்பினாள்.” என்றாள் கமலா. கமலா சொல்லப் போவதைக் கேட்பதற்குப்