Posts

Showing posts from August, 2024

பலாப்பழத்தைப் பக்குவமாகப் பறித்த பலராமன்

                                     பலாப்பழத்தைப் பக்குவமாகப் பறித்த பலராமன் வழக்கமாகச் சந்திக்கும் இடத்தில் நந்தினியின் வருகைக்காகக் காத்திருந்தான் பலராமன். எப்பொழுதும் நந்தினியும் அவள் தோழி கமலாவும் சேர்ந்தே வருவார்கள். அன்று, வெகுநேரம் கழித்து, கமலா மட்டும் வந்தாள். ”நந்தினி வரவில்லையா?” என்று கமலாவைக் கேட்டான் பலராமன். ”நந்தினி இனிமேல் வரமாட்டாள்.” என்று சொல்லிப் பலராமனை அதிர்ச்சிக்கு உள்ளாக்கினாள் கமலா. “ஏன்? அவளுக்கு என்னாச்சு?” என்று ஆச்சர்யத்தோடும் சற்று பயத்தோடும் பலராமன் கேட்டான். “இப்ப காலேஜ் எல்லாம் முடிஞ்சு போச்சு. அதனாலே அவ இப்ப எங்கேயாவது வெளியில போகணுமுன்னா, அவ அம்மா லீலாவின் ஆயிரம் கேள்விகளுக்குப் பதில் சொல்லணும். அதுக்குப் பயந்துதான் அவ வரல்லை.   நீ காத்திருப்பியே என்று உன்னிடம் தன் சூழ்நிலையைப் பற்றிச் சொல்லச் சொல்லி என்னை அனுப்பினாள்.” என்று விளக்கம் அளித்தாள் கமலா. ”சொல்ல வேண்டியதை நந்தினி ஃபோன்ல சொல்லியிருக்கலாமே?” என்று கேட்டான் பலராமன். ”சொல்ல வேண்டிய செய்தி நிறைய இருக்கு, அதனாலேதான் என்னை அனுப்பினாள்.”  என்றாள் கமலா. கமலா சொல்லப் போவதைக் கேட்பதற்குப் 

மறந்தனா அல்லது மறைந்தானா?

  மறந்தனா அல்லது மறைந்தானா? சென்னையில் உள்ள கலைமகள் கலைக்கூடத்தில் பரதநாட்டியம் கற்று, நாட்டியக்கலையில் தேர்ச்சிபெற்ற மாணவி சத்யாவின் பரதநாட்டிய நிகழ்ச்சி   பத்மஸ்ரீ நர்த்தகி சிவகாமி தலைமையில், முதலமைச்சர் ஜெயச்சந்திரிகா அவர்கள் முன்னிலையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. சத்யாவின் நாட்டிய நிகழ்ச்சியில், மிருதங்கம், வயலின், புல்லாங்குழல் ஆகிய இசைக்கருவிகள் ஒலிக்க சத்யாவின் நண்பன் முரளியின் பாட்டுக்கேற்ப சத்யா நடனம் ஆடினாள். அந்த நாட்டிய நிகழ்ச்சி  கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. சத்யாவின் முகபாவங்கள், நளினமான நடனம் ஆகியவற்றைக் கண்டு மகிழ்ந்த, நடனக்கலையை நன்கறிந்த முதலமைச்சர், ”சிலப்பதிகாரத்தில், மாதவியின் அரங்கேற்றத்தில் அவள் நடனம் ஆடியது ஒரு பூங்கொடி வந்து அரங்கிலே தோன்றி நாட்டியக்கலை நூல்களில் கூறப்பட்டுள்ள நெறிமுறைகளை எல்லாம் சரியாகக் கடைப்பிடித்து ஆடியதைப்போல் இருந்தது என்று இளங்கோவடிகள் எழுதியுள்ளாதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். இன்று சத்யாவின் நடனம் அதுபோல் இருந்தது.” என்று கூறிச் சத்யாவைப் புகழ்ந்து, ’நாட்டிய வித்தகி’ என்று பட்டமளித்துப் பொன்னாடை போர்த்திப் பாராட்டினார். முரளியின்