ராஜயோகம்
ராஜயோகம் ”அம்மா, நான் சாயங்காலம் வீட்டுக்கு வர்ரதுக்கு நாழியாகும்” என்றாள் பானு. “இந்தப் பொண்ணு, ஆபிசிலே என்னதான் பண்ணுவாளோ? கொஞ்ச நாளாவே இப்படித்தான். நாழியாகும்னு சொல்லிட்டு, இருட்னதுக்கு அப்புரம்தான் வீட்டுக்கு வர்ரா. எனக்குதான் கவலையா இருக்கு. அவ அப்பா எதையுமே கண்டுக்கிறதில்லை. கடவுள்தான் காப்பத்தணும்.” என்று தனக்குத்தானே கூறிக்கொண்டாள் பானுவின் அம்மா கமலம். பி. காம். படித்து முடித்துவிட்டு, பானு ஒரு பேங்க்லே மேனேஜராக வேலை பார்க்கிறாள். கடந்த சில மாதங்களாக அவள் பேங்க்குக்கு அடிக்கடி வரும் ராஜ் என்ற ஒரு இளைஞனோடு நெருங்கிப் பழகுகிறாள். பானுவின் பேங்க்குக்கு அருகில் உள்ள ஒரு கம்புயூடட்ர் நிறுவனத்தில் ராஜ் பணிபுரிகிறான். ராஜ் மிகவும் புத்திசாலி. அவன் கம்புயூட்டர் துறையில், IIT யில் Ph. D படித்து, மாடர்ண்...